சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவு – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடவடிக்கை!
Thursday, December 14th, 2023
சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மத அவதூறு தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க தனி பிரிவொன்றை நிறுவுமாறு காவல்துறை கணினி பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த உத்தரவினை வழங்கியுள்ளார்.
அத்துடன், இது குறித்து பொது மக்கள் 011 2300637 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது 011 2381045 என்ற இலக்கத்துக்கு தொலைநகல் அனுப்புவதன் மூலம் தங்களது முறைப்பாடுகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கம் - ஜனாதிபதி சந்திப்பு!
அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மாத்திரம் பணிக்கு அழைக்கும் நடைமுறை இன்றுமுதல் நடைமுறை!
மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை – வெளியானது அதிர்ச்சி தகவல்!
|
|
|


