சமூகவலைத்தளங்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
Thursday, July 18th, 2019
வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அந்த செயலிகள் ஊடாக ஆவணங்கள் பகிரும் போது முழுமையான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சைபர் பாதுகாப்பு நிறுவனமான சிமென்டெக் தெரிவித்துள்ளது.
மீடியா பைல் ஜெகின் (Media files jackin) என்ற பாதுகாப்பற்ற கோளாறு ஒன்று இந்த செயலிகளில் உள்ளதாகவும், அதன் மூலம் இந்த செயலிகளை பயன்படுத்துபவர்களின் அனுமதியின்றி மீடியா ஆவணங்களுக்குள் இணைந்து விடுகின்றன. அது தேவையற்ற முறையில் கையடக்க தொலைபேசியில் இயங்குவதாகவும், சிமென்டெக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், குரல் பதிவு மற்றும் முக்கிய தகவல்களை தவறாக பயன்படும் கும்பல்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


