சமுர்த்தி வங்கி கட்டடம் அமைக்க அனுமதியைத் தாருங்கள் – சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி!

Wednesday, June 6th, 2018

நாட்டில் வறுமை வீதம் குறைவடைவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றான சமுர்த்தி திட்டச் செயற்பாடுகளை சாவகச்சேரியில் மட்டும் நகரசபையினர் ஏன் வெறுக்கின்றார்கள் என்றும் அதற்கான தீர்வு கிடைக்கப்பட வெண்டும் என்றும் கொரி சாவகச்செரியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரச காணியில் வறிய மக்களின் வங்கியான சமுர்த்தி வங்கிக் கட்டடம் அமைப்பதற்கு பலதரப்பட்ட வழிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தடைகள் எமக்கு வேதனையைத் தருகின்றன என சாவகச்சேரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போராட்டகாரர் கள் விடுத்துள்ள செய்திக்கறிப்பில் –

சாவகச்சேரி நகரப்பகுதியை அண்டிய 15 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 12 ஆயிரம் அங்கத்தவர்களைக் கொண்ட நான்காயிரம் குடும்பங்கள் பலனடைகின்ற பதினோராயிரத்திற்கு மேற்பட்ட கணக்குகளைக்கொண்ட தினமும் முந்நூறுக்கு மேற்பட்ட பயனாளிகள் வருகின்றதும் இருபதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றதும் அனைத்து வங்கிகளையும் விட குறைந்த வட்டி வீதமான 12 வீத வட்டிக்கு வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தொழில் முயற்சிகளுக்கு ஐந்து இலட்சம் வரை கடன்களை வழங்கிக் கொண்டிருப்பதும் வறிய மக்களுக்கான இலவச சமுர்த்தி நிவாரணம் மற்றும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், விவசாயம், கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, வர்த்தகம் போன்ற தொழில்கள் மேற்கொள்பவர்களுக்கு மானிய உதவிகள் வழங்குவதும் ஆன்மிக கலாசார பண்பாட்டு நிகழ்வுகளையும் வேறும் பல விழாக்களையும் நடாத்துவதும் வறிய மக்களிற்கான இலவச காப்புறுதி, இலவச வீட்டு லொத்தர் போன்றவற்றை வழங்குவதும் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கின்ற ஓர் அரச அமைப்பாகவும் பல கோடி ரூபா நிதியினை தன்னகத்தே கொண்டுள்ளதுமான சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான கட்டடமும் தென்மராட்சியில் இருக்கும் கைதடி, சாவகச்சேரி, கொடிகாமம், வரணி ஆகிய நான்கு சமுர்த்தி வங்கிகளின் வங்கி நடவடிக்கைகளை நிர்வாகம் செய்கின்ற பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்ற அமைப்பான சமுர்த்தி மகா சங்கத்திற்கான கட்டடத்தினை சமுர்த்தி வங்கியின் முதலாம் மாடியில் அமைப்பதற்கும் அரசாங்க அதிபரின் அனுமதியுடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்துடனும் தென்மராட்சி பிரதேச செயலரினால் 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காணியில் கட்டடம் அமைப்பதற்கு இன்றுவரை முடியவில்லை.
இதன் பிரகாரம் தென்மராட்சி பிரதேச செயலரால் அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு சமுர்த்தி திணைக்களத்திற்கு வழங்குவதற்காக காணித்திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டடம் அமைப்பதற்காக ரூபா 1000,000 (பத்து இலட்சம்) நிதியம் சமுர்த்தி திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டு 27.10.2013 ம் திகதியன்று அப்போதைய அரசாங்க அதிபரான திரு.சு.அருமைநாயகம் அவர்களால் கட்டட வேலையை ஆரம்பிக்கவும் என்ற உத்தரவுக்கமைய அவரின் அனுமதியுடனும் கற்கள் பறிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமுர்த்தி வங்கிக் கட்டடம் கட்டுவதற்குப் பறிக்கப்பட்ட கற்களை சாவகச்சேரி நகரசபையினர் களவாடியதன் காரணமாக சாவகச்சேரி பொலிஸாரினால் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 13.02.2014 ஆம் திகதியன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கை நாம் முடிவுறுத்திய பின் இணக்கப்பாட்டிற்கு வந்த சாவகச்சேரி நகரசபை தவிசாளர் அவர்கள் சமுர்த்தி வங்கிக் கட்டடம் அமைப்பதற்கான அனுமதியினை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால் 02 வாரம் கழித்து மீண்டும் கட்டடத்திற்கான அனுமதியையும் காணி மாற்றத்திற்கான சிபார்சுக் கடிதத்தையும் வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கட்டடம் அமைப்பதற்கு எம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் சாவகச்சேரி நகரசபையினர் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு பிற்பாடு 28.09.2015 ஆம் திகதியன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் (ர்சுஊஃதுயுஃ250ஃ2015) எம்மால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்போன்ற எமது அனைத்து செயற்பாடுகளையும் சமுர்த்தி வங்கிக் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் சமுர்த்தி மகா சங்கம் போன்றவற்றில் எடுத்த தீர்மானங்களின் படியே மேற்கொண்டிருந்தோம்.
அரச காணியில் வறிய மக்களின் வங்கியான சமுர்த்தி வங்கிக் கட்டடம் அமைப்பதற்கு பலதரப்பட்ட வழிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வரும்தடைகள் எமக்கு வேதனையைத் தருகின்றன.

இப் பிரதேசத்தில் வாழ்கின்ற அதிகமான வறிய மக்கள் பயன்பெறுகின்ற சமுர்த்தி வங்கி பிரதேச செயலரின் காணியில் அமைவதற்கு தடைகளை ஏற்படுத்திய நகரசபையினர் இதன் அருகிலே உள்ள காணியில் கட்டப்பட்ட பொன்விழா மண்டபத்தின் கீழ்த்தளத்தினை இலங்கை வங்கிக்கு வாடகைக்கு வழங்கியமையானது எந்த வகையில் நியாயமாகும்.
ஒருவேளை நகரமானது வர்த்தக வங்கிகளுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சொந்தமானது என நினைத்தார்களோ தெரியவில்லை.

சாவகச்சேரி நகருக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான தேவைக்கு வருகின்ற சில ஆயிரங்களுக்கு மேற்பட்ட மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் சமுர்த்திப் பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே உண்மையான விடயமாகும்.
நகரிற்கு வருகின்ற மக்கள் தமது சமுர்த்தி சார்ந்த சேவைகளை நகரிலேயே பெற்றுக்கொள்ள விரும்புவதில் என்ன தவறுள்ளது. வறிய குடும்பத்தைச் சார்ந்த வயது முதிர்ந்தவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் தனிப்பட்ட போக்குவரத்து வசதி இல்லாதவர்களும் போக்குவரத்திற்காக அதிக பணம் செலவு செய்ய முடியாதவர்களும் எமக்கு ஒதுக்கப்பட்ட காணியிலேயே கட்டடம் அமையுமானால் தமக்குரிய சேவைகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வார்கள்.

நாட்டில் வறுமை வீதம் குறைவடைவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றான சமுர்த்தி திட்டச் செயற்பாடுகளை சாவகச்சேரியில் மட்டும் நகரசபையினர் ஏன் வெறுக்கின்றார்கள் என்று தெரியவில்லை.
தற்போது நகரசபை செயலாளரினால் தமது காணிக்கு பதிலாக அடையாளம் காட்டப்பட்ட காணிகள், 30 அலுவலர்களைக் கொண்டுள்ளதும் தினமும் 300 ற்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்வதற்கும் எமது வரைபடத்தில் உள்ளவாறு மேல்மாடிக் கட்டடம் அமைப்பதற்கும் பொருத்தமாக இல்லை.
நாம் எதிர்பார்ப்பது காணித் திணைக்களத்தினால் கோரப்பட்ட நகரசபையினது காணி மாற்றத்திற்கான ஆட்சேபனை இல்லை என்ற கடிதம் அல்லது எமது கட்டட விண்ணப்பத்தினை ஏற்றுக்கொள்ளல் மட்டுமே ஆகும்.
இவ்விடயத்தில் ஏற்பட்ட சில எதிர்ப்புக்களையும் மீறி சட்ட உதவியுடன் எம்மால் எம்மால் இக் கட்டடத்தினை கட்ட முடியாமைக்கான காரணம் இவ் விடயம் சார்;ந்த எமது அதிகாரிகள் சிலருக்கு இருக்கின்ற தெளிவற்ற மனப்பாங்கேயாகும்.

வறிய மக்கள் தமக்கான சேவைகளையும் வசதிகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்வதும் வறுமை நிலையிலிருந்து முன்னேறுவது என்பதும் இச் சமூகத்தின் மத்தியிலே கல்லிலே நார் உரிப்பது போன்ற ஒரே விடயமாகத் தொடர்வதை நிறுத்த இச் சபையானது முன்வர வேண்டும்.
கட்சி பேதங்களை விட்டுத்தள்ளி சமுர்த்தி சார்ந்த மக்களின் மனங்களிலே மகிழ்ச்சி ஏற்படக்கூடியதான நிலைப்பாட்டை சாவகச்சேரி நகரசபை எடுக்க வேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம்.

குறித்த காணியைத் தவிர வேறு எந்தக் காணியும் நகரப் பகுதியிலே எமக்குப் பொருத்தமாக இல்லை என்பதே உண்மை.இவ் விடயங்கள் அனைத்தையும் புதிதாக பதவியெடுத்த சபைக்குத் தெரிவுபடுத்தி சமர்ப்பித்த போதும் இரண்டு மாதம் கடந்த நிலையிலும் எமக்கு இன்றுவரை அனுமதி கிடைக்கவில்லை.

எனவே சமுர்த்தி வங்கி கட்டுவதற்காக முன்னாள் பிரதேச செயலரினால் 2012 இல் வழங்கப்பட்ட காணியிலே நாம் சமுர்த்தி வங்கியும் சமுர்த்தி மகா சங்கம் இணைந்த ஓர் மேல்மாடிக் கட்டடம் கட்டுவதற்கு ஓர் இதயபூர்வமான ஆதரவையும் கட்டட அனுமதியையும் வேண்டி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: