சமுர்த்தி பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் – அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க!

நாட்டிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டத்தினை எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பதிலாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறினார்.
குறித்த வேலைத் திட்டத்தை இலங்கை மின்சார சபை மற்றும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சும் இணைந்து மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும் அதன்கீழ் அனைத்து வீடுகளுக்கும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை பொருத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாகவும் நாளை யாழ். குடாநாட்டில் மின்தடை!
யாழ்.நகரில் நாளைமுதல் கடைகளை திறக்க அனுமதி – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு - வழக்கு விசாரணைகள் நாளையதினம்யாழ்.நீதவான்...
|
|