சமுர்த்தி திணைக்களத்தில் 7000 பேருக்கு நிரந்தர நியமனம்!

சுமார் 7000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நேற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி அதிகாரசபையாக இருந்து சமுர்த்தி திணைக்களமாக்கப்பட்டதன் பின்னர் குறித்த திணைக்களத்திற்கு 27,000 பேருக்கு நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில் அதன்முதற்கட்ட நடவடிக்கையாக 7000 பேருக்கு குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இந்த நியமனக் கடிதங்களை வழங்கிவைத்த இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் சமூகநலன்புரி அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் வடக்கு அபிவிருத்தி மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துகலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்றுடன் நிறைவுபெறும் A/L பரீட்சைக்கான விண்ணப்ப காலம்!
நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு - அமை...
கடன்கள் தொடர்பிலான மறுசீரமைப்பு இணக்கச் சான்றிதழ் விரைவில் வெளியாகும் - அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை...
|
|