சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன – இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்திப்பு – இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை தொடர்ந்து முக்கிய பங்காளியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்து!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கலந்துரையாடியுளளார்..
இதன்போது இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை தொடர்ந்து முக்கிய பங்காளியாக இருக்க வேண்டும் என பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளும் பொருளாதார ரீதியிலும் சுற்றுலாத் தலங்களிலும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிர்லா, நீண்ட காலமாக வளர்க்கப்பட்ட உறவுகள் காலப்போக்கில் வலுவடையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
இரு நாடுகளும் நெருங்கிய அண்டை நாடுகள் மட்டுமல்ல, வரலாறு, கலாசாரம் மற்றும் ஜனநாயக விழுமியங்களின் பாதுகாவலர்கள் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் நினைவுப்பேருரைநிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுசிறப்பிப்ப...
மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மே...
|
|