சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் உருவாக்கம் – சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவிப்பு!

Friday, May 14th, 2021

அமெரிக்காவின்’ உதவியுடன் சட்ட மா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வழக்குகள் மற்றும் சட்ட கோப்புகளை கண்காணிக்க இலத்திரனியல் முறைமை ஒன்றையும் ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு நீதித்துறை வல்லுநர்களின் திறனை இந்த கருவிகள் வலுப்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நீதிக்கான அணுகலை பலப்படுத்தவும் நல்லாட்சியை ஊக்குவிக்கவும் உலகம் முழுவதிலும் அமெரிக்காவின் உதவிகள் உதவியுள்ளன.

ஆரம்பிக்கப்பட்ட குறித்த கருவிகளானது நீதி நிர்வாகத்தை மேலும் திறனுடையதாக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: