சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் – சுகாதார பிரிவினர் வலியுறுத்து!

Wednesday, April 14th, 2021

பண்டிகைக்காலத்தில் இடம்பெறும் விபத்துக்களில் 85 சதவீதமானவை தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இடம்பெறுவதால் அனைவரும் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என சுகாதார பிரிவினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி உத்தியோகத்தர் திருமதி புஷ்பா ரம்யானி டி சொய்சா இதுதொடர்பாக தெரிவிக்கையில் –

வீதி விபத்துக்கள், வீட்டில் இடம்பெறும் விபத்துக்கள், வன்முறைச் செயற்பாடு, விளையாட்டு, பட்டாசு விபத்துக்கள் என்பன இக்காலத்தில் இடம்பெறும் விபத்துக்களாகும். போதைப்பொருள் பாவனையைத் தவிர்த்தால் இந்தச் செயற்பாடுகளில் கூடுதலானவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

வீடுகளில் தேவையற்ற அழுத்தமும், பதற்றமுமில்லாமல் செயற்படுவதன் மூலம் பிள்ளைகளும், வயது வந்தவர்களும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரதன் போன்ற விளையாட்டுக்களில் இணைந்து கொள்வது ,தமது உடல் ஆரோக்கியம் அதற்கு உகந்ததா? என்பதை இரண்டு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறு பிள்ளைகள் பட்டாசுகளைக் கொழுத்துவது பொருத்தமற்றது.

பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது அருகில் உள்ள விலங்கினங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இது மிருகங்களின் கேட்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: