சங்காவிடம் கிரிக்கெட் சபையை கையளிக்க தீர்மானம்!
Saturday, June 2nd, 2018
இலங்கை கிரிக்கெட் சபையை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கூடிய ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவிலேயே இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அல்லது அமைச்சரவையில் முன்மொழிவதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரின் நிர்வாகத்தின்கீழ் இலங்கைக் கிரிக்கெட் சபை பெரும் சீரழிவை எதிர்கொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கிறிஸ் கெய்ல் ஓய்வு!
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 11பேர் குணமடைந்தனர் - தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!
யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படுகின்றது உள்ளக விளையாட்டரங்கு!
|
|
|
5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு: இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கண...
பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு கடுமையான சுகாதார நடைமுறைகள் - ஜனாதிபதி தலைமையிலான செயலணி கூட்டத்தி...
நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் - ஜனாதிபதி ரணி...


