சங்கத்தானை முருகன் விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைக்கான நிதியுதவி வழங்கிவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் சங்கத்தானை முருகன் விளையாட்டு கழக வீரர்களுனக்கான சீருடைகள் கொள்வனவுக்கு நிதிஉதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி நகர நிர்வாகத்தினரிடம் குறித்த விளையாட்டு கழக நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கட்சி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (17) விளையாட்டு கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், சாவகச்சேரி நகர நிர்வாக செயலாளர் அமீன் மற்றும் சாவகச்சேரி சகர உதவி நிர்வாக செயலாளர் திருக்குமாரன் ஆகியோரால் கழக நிர்வாகத்தினரிடம் விளையாட்டுச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
Related posts:
மீனவர் மீது தாக்குதல்: மறுக்கிறது கடற்படை!
தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளை மாற்றும் கேவலமான அரசியலை எப்போதும் நாம் மேற்கொண்டது கிடையாது – ஈ.பி.டி...
காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதி...
|
|