க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!
Monday, December 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பரீட்சார்த்திகள் தங்கள் விண்ணப்பங்களை கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
அதோடு விண்ணப்பப் படிவங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரிகள் இப்போது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதியிடம் சைட்டம் குறித்த தீர்வுத் திட்டம் கையளிப்பு!
பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் !.
|
|
|


