க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை – பரீட்சைகள் திணைக்களம் !
Thursday, September 30th, 2021
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் ஆறு பதிவாகியுள்ளன.
மேலும் கையெழுத்து மாற்றம், விடைத்தாள், கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
3 மாதத்துக்குள் 720 முறைப்பாடுகள் - இலங்கைக் கணினி அவசர நடவடிக்கை குழு!
ஒத்திவைக்கும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு!
யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் - அரச அதிபர் அத...
|
|
|


