க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை(03) ஆரம்பமாகி 12 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இதேவேளை, இரத்மலானை விசேட தேவையுடையோர் வித்தியாலயம் மற்றும் தங்கல்ல, மாத்தறை, சிலாபம், கொழும்பு மகசீன் சிறைச்சாலை போன்றவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போராதனை போதனா வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் 4,561 பரீட்சை நிலையங்களும், 541 பரீட்சை இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாட்டில் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு - ஒருவாரத்தில் 51 பேர் மரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவி...
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் - அமெரிக்க திறைசேரி செயலாளர் ...
புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!
|
|