கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
Monday, October 3rd, 2022
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பத்தின் போது சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன பெயர் விபரங்களை சபைக்கு அறிவித்தார்.
இதன்படி, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவுக்கு 27 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவில், 5 சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ரவூப் ஹக்கிம், எஸ்.எம்.எம் முஸாரப், எஸ்.எம் மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவான கோபாவுக்கு 27 உறுப்பினர்களும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். காதர் மஸ்தான், சுரேன் ராகவன், கபிர் ஹாசிம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|
|


