கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!
Monday, September 13th, 2021
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்கவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் களனி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
அவர் மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
களனி பொலிஸ் பிராந்தியத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு சூப்பர் நியூமரரி நிலை என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல், கையூட்டுப் பெறல், முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டு வந்த நிலையில் குறித்த பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கடும் காற்று: வவுனியாவில் 48 வீடுகள் சேதம்!
காங்கேசன்துறை துறைமுகம் விரைவில் அபிவிருத்தி!
முகக்கவசத்தின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் - இலங்கை சுவாச நோய் தொடர்பான...
|
|
|


