கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானம்!

கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய சில நிறுவனங்களின் ஊழியர்களையும் கடமைகளுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ள அவர் நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு பல்வேறு நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள 14 கப்பல்களை கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்கூட்டிய அறிவிப்பின்றி பணிப்புறக்கணிப்பு - அரசாங்க மருத்துவ அதிகாரிகள்!
பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு?
நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு - ஜனாதிபதி உறு...
|
|