கொள்கை ரீதியில் நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!
Thursday, June 24th, 2021
ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக நாட்டை கொள்கை ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை இராஜதந்திர ரீதியில் மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது கிடைக்காமற் போனால் அதனை எதிர்கொள்வதற்கு மாற்று வழி தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
கொழும்பு பங்குச் சந்தையிலும் முறையான ஒழுங்குறுத்தல் வேலைத்திட்டம் அமுலில் இருக்க வேண்டுமென்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் முன்னின்று செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் சந்தை நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவது சிரமமான காரியம் என்று கூறப்படும் கூற்று தவறானதாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


