கொரோனா வைரஸ் : உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Sunday, April 5th, 2020

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை விலக்கினால், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்கள் மேலும் பல காலம் நீடிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இதுபோன்று பொருளாதாரம் ஸ்தம்பித்திருப்பதை எங்கள் வரலாற்றில் பார்த்ததே இல்லை என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிரிஸலினா தெரிவித்துள்ளார். அத்துடன் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியை விட இது பன்மடங்கு மோசமானது என்று அவர் மேலும் கூறியுள்ளார்

Related posts: