கொரோனா பரவல் அதிகரிப்பு – யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது!
Sunday, March 28th, 2021
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. வடக்கு மாகாண ஆளுனர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்ததோடு நாளையதினத்தில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதி வரை யாழ் கல்வி வலய பாடசாலைகளை தற்போதுள்ள இடர் காலத்தை கருத்தில்கொண்டு பாடசாலைச் செயற்பாடுகளை இடை நிறுத்துவதாகவும் அச்செயலணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாடசாலைகள் மீள ஆரம்பித்த பின்னரே பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை - பரீட்சைகள் திணைக்களம்...
தடையை நீக்குவோம் - அமைச்சர் நாமலின் அறிவிப்பு!
யாழ் மாநகர சபையின் ஒத்துப்போக முடியாது- தவறுக்கு மன்னிப்பு கோரினால் தொடர்ந்து ஆதரவு- முன்னாள் முதல்வ...
|
|
|


