கொரோனா பரவலால் 92 சதவீத ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022

கொரோனா வைரஸின் உலகளாவிய பெருந்தொற்று காரணமாக 129 நாடுகளில், 92 சதவீதமான ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி திட்டங்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனா பெருந்தொற்று சுகாதார சேவைகளை கடுமையாக பாதித்துள்ளதுடன், அவற்றில் அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: