கொரோனா தொற்று வரும் நாள்களில் குறைவடையும் – அனில் ஜாசிங்க!
 Tuesday, April 14th, 2020
        
                    Tuesday, April 14th, 2020
            
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வரும் நாள்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.
எனவே வரும் நாள்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
முதல்வரிடம் கருத்து கோரியுள்ளது கூட்டமைப்பு!
500 மில்லியன் டொலர் கடன் இன்று செலுத்தப்பட்டது - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு...
நிரந்தர நியமனம் கிடைக்காது யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்கள், அமைச்சர் டக்ள...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        