கொரோனா தொற்று எதிர்ப்பு நடவடிக்கை: ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு!

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுககு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியும் தானும் இது குறித்து முக்கிய தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடியதாகவும் Tedros Adhanom Ghebreyesus தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - அமைச்சர் பைஸர் முஸ்தபா!
பாண் விலை அதிகரிப்பு தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை - அகில இலங்கை ...
பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!
|
|