கொரோனா தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாடு மீளத் திறக்கப்படுகின்றது – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி!

Sunday, May 10th, 2020

கடந்த வாரத்தில் கொரோனா நோய்த் தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாட்டை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் தங்களது பாதுகாப்பினை தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு நாட்டை முடக்க நிலையிலிருந்து விடுவித்துள்ளது.

குறிப்பாக சுதுவெல்ல, கொழும்பு – 12 மற்றும் பண்டாரநாயக்க மாவத்தை ஆகிய இடங்களில் கடந்த வாரத்தில் கொரோனா நோய்த் தொற்றாளிகள் எவரும் பதிவாகியிருக்கவில்லை.

வெலிசறை கடற்படை முகாமிலிருந்த படையினர் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களே கொரோனா நோய்த் தொற்றாளிகளாக பதிவாகி வருகின்றனர்.

எனவே நாட்டு மக்கள் தேவையற்ற வகையில் வீடுகளிலிருந்து வெளியேறுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என்பதுடன் தங்களது பாதுகாப்பினை தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமானது என்றும் மக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Related posts: