கொரோனா அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – பெற்றோரிடம் சுகாதார தரப்பினர் கோரிக்கை!

Thursday, July 28th, 2022

கொரோனா நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காய்ச்சல், தடுமன் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அவ்வாறான அறிகுறிகள் கொண்ட மாணவர்களை உடனடியாக வைத்தியரிடம் அழைத்து செல்லுமாறு சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கையில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாது - அரச மருத்துவ அதிகாரிகள் ச...
மக்கள் வங்கியினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!
இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கு அதிகரிக்கப்பட்ட வரிச்சலுகை நிவாரணம் - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை...