கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை – சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். நாடளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பரிந்துரையானது, எந்தவொரு மத அல்லது ஏனைய காரணங்களுக்காக மாற்றப்படாமல் செயற்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்பதாக முஸ்லிம் மக்கள் தமது ஜனாஸ்தாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்கமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் அது தொடர்பில் ஆரய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அந்த நிபுணர் குழு தனது பரிந்துரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவத்துக்கு எதிரான இராணுவ அதிகாரிக்கு பதவி!
இராணுவத்தை துரிதமாக அப்புறப்படுத்த முடியாது - இராணுவ தளபதி!
துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது - திறைசேரி செயலாளர் தெரிவிப்பு!
|
|