கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு!
 Sunday, July 25th, 2021
        
                    Sunday, July 25th, 2021
            
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த செயலமர்வு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையினால், அந்த சட்டமூலம் தொடர்பில் தெளிவுப்படுத்தலினை ஏற்படுத்துவதற்காகவே செயலமர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரீட்சைக்கு அதிகமான மாணவர்கள் தோற்றும் நாடு இலங்கை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி கோட்டப ராஜபக்ச இடையே அபிவிருத்தி உள்ளிட்ட  பல முக்கிய விடயங்...
கண்ணீர் அஞ்சலி!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        