கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கீடு – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து நாளை குறித்த பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து அகழ்வுப்பணிக்கான திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆகஸ்ட் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - பொலிஸ் தலைமையகம் ...
வெளிநாடுகளில் இருந்து ஆடை இறக்குமதி செய்வது முற்றாக தடை - வெளியிட்டுள்ளதாக பற்றிக் மற்றும் கைத்தறி ந...
சந்தையில் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!
|
|