கையிரத திணைக்கள அனைத்து பிரிவுகளுக்கும் விடுமுறைகள் இரத்து!
Sunday, December 10th, 2017
அத்தியாவசிய சேவையாக தொடருந்து சேவை வர்த்தமாணியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தொடருந்து சேவை பணியாளர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து தொடருந்து சேவை பணியாளர்களையும் சேவைக்கு சமூகமளிக்குமாறு தொடருந்து திணைக்களத்தினால் இன்று மாலை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தொடருந்து சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தொடருந்து சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில்இ போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


