குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இருந்து சில அதிகாரிகள் திட்டங்களைச் செயற்படுத்துவதால் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதில்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் வரையப்பட்ட அனைத்து நகர அபிவிருத்தித் திட்டங்களும் எதிர்காலத்தில் நகரங்கள் உருவாகும்போது தளத்தின் மக்கள் தொகை, பொருளாதாரம், வீடுகள், போக்குவரத்து, சமூக வசதிகள் மற்றும் நிலப் பயன்பாடு உள்ளிட்ட காரணிகளைக் கருத்திற்க் கொண்டு புதுப்பிக்கப்படவுள்ளது.
அந்தந்த அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு நகரத்திலும் உள்ள மக்களின் கருத்துக்களைக் கருத்திற் கொள்ள வேண்டியது கட்டாயமாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தயாரிக்கப்பட்ட சில நகர அபிவிருத்தித் திட்டங்கள் தற்போதைய தேவைகளுக்கு இணங்கவில்லை என்றும், எனவே, இன்றைய தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை மேம்படுத்துவதுடன், நகரின் வளர்ச்சியும் தற்போதைய உலகத்திற்கு ஏற்ற வகையில் செய்யப்பட வேண்டும். வரலாற்று அல்லது தொல்பொருள் மதிப்புகளைப் பாதுகாக்க நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“சில அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் இந்தத் திட்டங்களைச் செய்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதில்லை எனவும், அரசாங்கத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|