குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!

Friday, July 22nd, 2022

இலங்கையில் இருந்து கடந்த ஜனவரியில் முதல் ஒன்றரை இலட்சம் பேர் வரை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதில் ஒரு இலட்சத்து 767 பேர் தனித்தும் 55 ஆயிரத்து 411 பேர் பணியகத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இந்திய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

கட்டாருக்கு 39 ஆயிரத்து 216 பேரும் சவூதிக்கு 3219பேரும் தென்கொரியாவுக்கு 2576பேரும் சென்றுள்ளனர்.

46ஆயிரத்து 992பேர் தொழில் நிபுணத்துவத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 49ஆயிரத்து 923 பேர் தொழில்களுக்காக சென்றுள்ளனர். 38ஆயிரத்து 871 பேர் வீட்டுப்பணியாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை இலங்கையர்கள் பலரும் நாள்தோறும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் மற்றும் பழைய கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி!
நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கை !
அரச அதிகாரிகளாளும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம் - பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்க...