குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
 Sunday, May 15th, 2022
        
                    Sunday, May 15th, 2022
            
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.
குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், நெடுந்தீவு இறங்கு துறையில் அமைந்துள்ள குமுதினி படகுப் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தவர்களிற்கு சுடரேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
1985 ஆம் ஆண்டு இதேநாளில் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
குமுதினி படகு நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்படையினரால் இந்த படுகொலை அரங்கேறியது.
இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்ட அதேவேளை 30 ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        