குடும்பப் பதிவுக்கு இன்று இறுதிநாள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் அனைத்து குடும்பங்களின் விவரங்களும் அந்தந்தப் பிரதேச செயலகங்களால் கணினி மயப்படுத்தப்படவுள்ளன. அதற்கான பதிவுகள் அந்தந்தக் கிராம அலுவலர்களால் திரட்டப்பட்டு வரும் நிலையில் இது வரை பதிவு செய்யாதவர்கள் நாளைக்குள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பிறப்புச் சான்றிதழ் இலக்கம், தேசிய அடையாள அட்டைகளின் இலக்கம், குடும்ப அலகுக்கான தொலைபேசி இலக்கம் போன்ற விவரங்களே பதிவு செய்யப்படுகின்றன. இது வரை பதிவு செய்யாத குடியிருப்பாளர்கள் தத்தமது கிராம அலுவலர் அலுவலகத்தில் இன்று தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழக மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணனி - பட்டம் பெற்றும்வரை கடன் தொகையை செலுத்த தேவையில்லை - ப...
இன்றும் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்ய சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எதிர்வு...
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு வாக்களிக்காத இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் – காரணத்தை ...
|
|