குடியரசு அந்தஸ்தை பெற்று இன்றுடன் 45 ஆண்டுகள் பூர்த்தி!
Monday, May 22nd, 2017
இலங்கை டொமீனியன் அந்தஸ்த்தில் இருந்து முற்றாக நீங்கி இறைமையுள்ள சுதந்திர அரசாக மாறி இன்றுடன் 45 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
157 வருடங்கள் பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த தொடர்புகளை முடிவுக்கு கொண்டுவந்து 1972ஆம் ஆண்டு மேமாதம் 22 ஆம் திகதி பகல் 12.43 க்கு இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டதஅன்றை தினம் பிற்பகல்
12.46க்கு இலங்கை குடியரசின் முதலாவது பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து வில்லியம் கொப்பலவ இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
நாட்டின் பாராளுமன்றமாக அன்று கருதப்பட்ட தேசிய அரச பேரவையின் சபாநாயகராக ஸ்ரான்லி திலகரத்ன, சபாநாயராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
குடியரசு யாப்பை கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா வரைந்தார். குடியரசு யாப்பை தொடர்ந்து சிலோன் என்று அழைக்கப்பட்டு வந்த தாய்நாடு அன்று முதல் ஸ்ரீ லங்கா என்று அழைக்கப்பட்டது.
1972ஆம் ஆண்டு மேமாதம் 22 ஆம் திகதி அரசின் இலட்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை வடிவமைத்த பெருமை எஸ்.எம்.செனவிரத்னவை சாரும்.
Related posts:
|
|
|


