குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை மத்தி மக்கள் கோரிக்கை!
Tuesday, June 19th, 2018
அரியாலை மத்தி தெற்கு பகுதி மக்கள் தமது அடிப்படை தேவையான குடிநீருக்காக தாம் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக குடிநீர் பெற்றுக்கொள்வதில் இப்பகுதி மக்கள் எதிர்கொண்டுவந்த அசௌகரியங்கள் குறித்து கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து மக்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறியும் முகமாக அப்பகுதி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் சந்திப்பொன்றை ரவீந்திரதாசன் மேற்கொண்டிருந்தார். இதன்போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மக்களது குறித்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்திய இரவீந்திரதாசன் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டுசென்று காலக்கிரமத்தில் தீர்வினை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வவதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|
|




