குடாநாட்டில் மூவாயிரம் படகுகள் பதிவு – கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம்!

இதுவரை சுமார் மூவாயிரம் படகுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரம் வரையான படகுகள் பதிவு செய்யப்படாமையும் உள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தந்து பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
மீனவர்கள் தத்தம் பிரிவு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள பரிசோதகர்களிடம் தொடர்புகொண்டு படகுகளை பதிவுசெய்து கொள்ள முடியும். படகுகளை பதிவு செய்தல் கட்டாயமானதுடன் பதிவு செய்யப்படாத படகுகள் தொழிலில் ஈடுபடுவதற்கு தடைசெய்யவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Related posts:
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலை சீருடைகள்!
அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியது - யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் த...
இலங்கை – சீனா இடையேயான உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது ச...
|
|