குடாநாட்டில் அடுத்த ஆண்டு மீள்குடியேற்றம் முடிவுறும் – யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மகேஷ் சேனாநாயக்க!

Friday, September 9th, 2016

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீள்குடியேற்ற முடியும் என யாழ்.மாவட்டத்திற்கான படை கட்டளைத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி 3 ஆயிரத்திற்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்டத்திற்கான படை கட்டளைத் தளபதி மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுடனான நல்லிணக்க முயற்சிகளை துரிதப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.யாழ் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் சற்று அதிக எண்ணிக்கையிலான மக்களே மீள்குடியேற்றப்படவுள்ளதாக மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 71 முகாம்களில் 971 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 388 பேர் தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் புதிததாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.யாழ் மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் 88 வீதம் முழுமை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட மகேஷ் சேனாநாயக்க, மீதமாகவுள்ள பகுதிகளில் காணப்படும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அதிக காலம் எடுக்கும் என குறிப்பிட்டார்.

Major-General-Mahesh-Senanayaka.jpeg

Related posts: