கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு!

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடைகள் ஆரம்பித்துள்ளன. தனியார் தற்போது நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். அதனால் நேற்று தொடக்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினர் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளனர்.
ஒரு விவசாயிடமிருந்து 2 ஆயிரம் கிலோக்கிராம் நெல் கொள்வனவு செய்யப்படும். நாடு 38 ரூபாவுக்கும் சம்பா 41 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அதற்கான படிவங்களை களஞ்சியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியுமென்று நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
கொரோனா வைரஸ் : சகல ஒத்துழைப்பையும் வழங்க தயார்!
எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...
|
|