கிளிநொச்சியின் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஐவருக்கு நிதிமன்றால் தண்டப்பணம் விதிப்பு!
Thursday, September 8th, 2022
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய 5 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பம் நேற்று நடைபெற்றுள்ளது. அத்துடன் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் அனுமதிப் பத்திரமில்லாத டிப்பர் வாகனங்களையும், உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி டிப்பர் வாகனத்தில் மணல் கொண்டு சென்ற ஒருவருக்கும் பத்தாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை
நடமாடும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் தராசுகளை சோதனைக்குட்படுத்த விசேட நடவடிக்கை!
மூன்று தமிழக மீனவர்களுக்க சிறை - இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்ப்பு!
|
|
|


