கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற பூநகரி செட்டியகுறிச்சி மக்களுக்கான குறைகேள் சந்திப்பு!

பூநகரி செட்டியகுறிச்சி மக்களுக்கான குறைகேள் சந்திப்பு அப்பகுதி கிராம சேவகர் அலுவலகத்தில் (5) நடைபெற்றுள்ளது.
ஈ.பி.டி.பியின் பூநகரி வடக்கு பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சந்திப்பில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை மீளவும் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டன.
அத்துடன் குழாய் மூல குடிநீர் விநியோகத்தை பெறுவதற்கான கோரிக்கைகள், உவர் நீர் தடுப்பணைகளை மீளவும் புனரமைப்பதன் அவசியம் தொடர்பிலும் குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டன.
பூநகரி தெற்கு பிரதேச இணைப்பாளர் ஜெகநாதன் பூநகரி வடக்கு பிரதேசத்தின் வளப்பற்றாக்குறை நிலமைகளை கவனத்தில் எடுத்து குறிப்பாக நன்நீர் வளத்தை பாதுகாப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி உரையாற்றினார்.
இந்நிலையில் சேதமடைந்துள்ள உவர்நீர் தடுப்பணைகளின் நிலமைகளும் இணைப்பாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர்களால் நேரடியாக சென்று பார்வையிடப்பட்டது.
குறித்த சந்திப்பில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|