கிராம உத்தியோத்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு கையளிப்பு!

கிராம உத்தியோஸ்தர்கள் தொடர்பான சட்டத்தை தயாரிப்பதற்கான பத்திரம் மற்றும் கிராம உத்தியோஸ்தர்களின் பயண செலவுகள் மற்றும் அலுவலக கொடுப்பனவுகள் தொடர்பான யோசனை என்பன அமைச்சரவையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தபின்னர் மேலதிக நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பியந்த தெரிவித்துள்ளார்..
தற்போது வெற்றிடமாக உள்ள 2002 கிராமிய சேவைக்களங்களுக்கான கிராம உத்தியோஸ்தர்களை இணைத்துக்கொள்ளும் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் மேற்க்கொள்ள அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
போதை பொருள் பாவனையே வறுமை அதிகரிப்பதற்கு காரணம் – ஜனாதிபதி!
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்தில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிஸ் ஊடக பிரிவு அ...
தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது - பேராசிரியர் புஸ்பரட்ணம் எட...
|
|