கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டம் – மட்டக்களப்பில் அமைச்சர் நாமல் ஆராய்வு!

Friday, September 24th, 2021

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்திற்க்கு விஜயம் செய்திருந்தனர்.

குறிப்பாக இவ் விஜயமானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நாடுபூராகவுமுள்ள கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் மட்டக்களப்பு பகுதியில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பிரிவிற்கென அமைக்கப்படும் கட்டிடத் தொகுதியின் வேலைகளை துரிதப்படுத்துதல், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை உயர் ஆற்றல் கதிர்வீச்சுடன் கூடிய உயர்தர கதிரியக்க சிகிச்சை நிலையமாக முன்னெடுப்பது, செங்கலடி புன்னக்குடா போன்ற பகுதிகளை பிரத்தியேக பூர்வ ஆடை உற்பத்தி மற்றும் அது தொடர்பான கைத்தொழில் வலையமாக பிரகடனப்படுத்தல் போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: