காற்று சீராக்கி இயந்திர பயன்பாட்டுக்கு புதிய சட்டவிதி!

நாட்டில் காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிருபம் கொண்டுவரப்படும் என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் மூலோபாயமாக இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சூரிய எரி சக்தி பெற்றுக்கொடுப்பதற்கான புதிய சுற்றுநிருபமும் கொண்டுவரப்படவுள்ளது என்றும் சூரிய எரிசக்தியை பெற்றுக்கொள்வதற்கு 40 சுற்றளவு அடிக்கு மேற்பட்ட கூரையைக்கொண்ட வீடொன்றே தேவையென்றும் அமைச்சர் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் இழப்பீட்டு!
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - கல்வி அமை...
ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|