காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு 45.27 மில்லியன் டொலர்!
Thursday, May 4th, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான ஆவணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்
Related posts:
இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்...
கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!
இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் அனைவரும் அவசர கதவு வழியாக வெளியேற்றம...
|
|
|


