கள்ளச்சந்தை டொலரை பயன்படுத்தி அரசாங்கம் ஆயுதக்கொள்வனவில் ஈடுபடவில்லை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!
Wednesday, February 2nd, 2022
கறுப்புச் சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது.
“நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் – பசில்“ என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருடன் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் இதன்போது நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். நகரில் நடைபாதைகளின் முன்பாகப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!
கொழும்பில் நீராவி ரயிலின் பயணம் ஆரம்பம்!
தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!
|
|
|


