கல்வியில் ஏற்படும் புரட்சியிலேயே நாடும் வளர்ச்சி பெறும் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
Saturday, March 18th, 2017
எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம் கல்வியில் ஏற்பட்ட புரட்சியேயாகும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டின் அபிவிருத்திக்கு கல்விக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவதன் தேவையையும் அமைச்சர்; சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் சமீபத்தில் இடம்பெற்ற நியமனங்களை வழங்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார.; கட்சித் தராதரம், தனிநபர் அரசியல் கட்சி நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றைப் புறந்தள்ளி நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தற்போதைய அரசாங்கம் முன்நின்று செயற்படுகிறது என்றும் அவர் கூறினார்.
Related posts:
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதி மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை நீக்குவதற்கு டக்ளஸ் தே...
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியுடன் திட்டம்!
தொடருந்து ஆசனங்களை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்வதற்கான கால எல்லை 30 நாட்களாக நீடிப்பு - தொடருந்து திண...
|
|
|


