கலை, இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடத்தில் தூண்டும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன்!

Friday, July 6th, 2018

தமிழரது கலை, இலக்கியங்கள் தொடர்பான ஆர்வத்தினை மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுப்பதனூடாகத்தான் எதிர்கால சந்ததியினருக்கு எமது இனத்தின் பாரம்பரியங்களை எடுத்துச் செல்ல முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சின்னத்துரை கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

கரவெட்டி நவிண்டில் கலை இலக்கிய மன்றம் நடத்திய முழு நிலா நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது தமிழினத்தின் பாரம்பரியங்கள் காக்கப்படவேண்டும் என்பதில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் மிகுந்த அக்கறையுடன் பல்வேறு வகையான செயற்றிட்டங்களை முன்னெடுத்து அவற்றை நடமுறைப்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளார். இவற்றுக்கான சான்றுகளை யாழ் மாவட்டத்தின் பல பாகங்களிலும் காணமுடியும்.

அந்தவகையில் எமது கலை காலாசார பண்பாடுகளை மேலும் நாம் வளர்ப்பதற்கு ஒவ்வொருவரும் தத்தமது பங்களிப்புகளை செய்ய முன்வரவேண்டும். அவ்வாறு முன்வரும் போதுதான் அத்துறை சார்ந்தவர்ளை நாம் வெளிக்கொண்டுவந்து எமது தமிழினத்தின் கலை கலாசாரங்களை மேலும் வளர்க்க முடியும்.

அந்தவகையில் நவிண்டில் பிரதேச கலை இலக்கிய மன்றம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது குறித்த இலக்கிய மன்றத்தால் நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசில்களையும் பிரதேச சபை உறுப்பினர் கிருபாகரன் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

36680587_1833470583358687_6881448751144108032_n 36660753_1833470566692022_430060096165249024_n 36677012_1833470553358690_2087993523407159296_n

Related posts: