கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்கள் நடத்த தடை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Wednesday, December 6th, 2017
க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை பூர்த்தியாகும் வரையில் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாதிரி வினாத்தாள் அச்சிடுதல் வினாக்கள் குறித்து கலந்துரையாடல் கருத்தரங்குகள் நடாத்துதல் வகுப்புக்களை நடாத்தல் போன்றவற்றிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாகக் காலவரையற்ற போராட்டத்தில் குதிப்பு!
முக்கியமான தடயம் சிக்கியது !
அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பொன்று சட்டமா அதி...
|
|
|


