கம்போடிய பிரதமரின் இலங்கை விஜயம் இரத்து!
 Tuesday, November 29th, 2016
        
                    Tuesday, November 29th, 2016
            
கம்போடிய பிரதமர் ஹு சென், இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை இரத்துச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கம்போடிய பிரதமர் இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு விஜயம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
பிரதானமாக பாகிஸ்தானுக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு கம்போடியப் பிரதமர் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஹு சென்னுக்கும் பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் மியான் ரசா ராபானிக்கும் இடையிலான கலந்துரையாடலை அடுத்து கம்போடிய பிரதமரின் விஜயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நாட்டில் நிறைவுசெய்யப்பட வேண்டிய மிக முக்கிய பணிகள் இருப்பதனால் இந்த விஜயத்தை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக கம்போடிய பிரதமர் அலுவலக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
 
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        