கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி – அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

Saturday, October 30th, 2021

நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்றையதினம் குறித் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதிமுதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: