கனத்த மழை பெய்யும் சாத்தியம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை!
Saturday, October 10th, 2020
இலங்கையின் சில பகுதிகளில் கனத்த மழை பெய்யக் கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு – மத்திய வங்காளவிரிகுடா கடற்பிராந்தியங்களில் குறைந்த அழுத்த தாழமுக்கம் வலுவடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றுமுதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை ஆழமான கடற் பிராந்தியங்களுக்கு செல்வதை தவிர்த்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை!
பால்மாக்களின் விலை அதிகரிப்பு!
நெடுந்தீவு வெட்டகளி குளத்தில் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்...
|
|
|


